களப்பணியில் இருந்து சில துளிகள்

கபாடிவால கனெக்ட்டின் , சமூக மேலாளராக பணி புரியும் நான், எனது அன்றாட பணிகளில் மிக முக்கியமானது பழைய பொருள் வாங்கும் வியாபாரிகளின் கடைகளை கண்டுபிடித்து, அவர்களை பற்றி தெரிந்து கொண்டு விபரங்களை பதிவு செய்வது. இது வரை நான் சுமார் 100 கடைகளை அடையலாம்  கண்டு, அவர்களுடன் பேசியுளேன். பேசும் போது அவர்களை பற்றி பல விசயங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது. 

எனது களப்பணியின் முதல் நாள் சென்னையில்  உள்ள மண்டலம்  பத்தில் (Zone 10) அமைந்துள்ள  கடைகளை சர்வே எடுப்பது. கைப்பேசியில் (Smartphone) நாங்கள் தயார் செய்து வைத்து இருந்த ஓடிகே (ODK App) பயன்பாட்டில், கேள்விகளோடு  சென்றேன். எனக்கும் இந்த ஓடிகே பயன்பாடு புதிது, சற்று தயக்கத்துடன் சென்ற எனக்கு, எவ்வாறு கேள்விகளை தொடங்குவது என்று  புரியவில்லை. ஏனென்றால் எதிரில் நிற்பவர் எனது கேள்விகளை எவ்வாறு எடுத்துக்கொள்வார் என்று தெரியாது. 

தொடக்கத்தில் பழைய பொருள் வியாபாரிகள் (முறைசாரா அமைப்பினர்)பற்றி எனக்கு அவ்வளவாக தெரியவில்லை. சிறிது நாட்களில் அதற்கான விடைகளை அள்ளித்தந்தனர் ஒவ்வருவரும். நான் சர்வே எடுக்க செல்லும்போது பழைய பொருள் வியாபாரிகள், ஏன் எதற்க்கு சர்வே எடுக்கிறீர்கள் என்று சரமாறி கேள்விகளை கேட்ப்பார்கள்.  தொடக்கத்தில் தயக்கம் காட்டிய நான், பின்னர்  எவ்வாறு அவர்களை அணுகுவது என்று பழகி கொண்டு அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி, எனது கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன். சில நேரங்களில் வியாபாரிகள் அவர்களின் பணியை விட்டு எனக்கு பதில் கூற வேண்டும் என்பதால் கோபம் அடைவார்கள், சில வியாபாரிகளுக்கு நாங்கள் செய்யும் பணியை புரிய வைக்க நீண்ட நேரம் ஆகும். சிலர் எதை பற்றியும் கவலை பட மாற்றார்கள் உடனே அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறி அவர்கள் பணியை செய்ய திரும்புவார்கள், சிலர் மீண்டும் மீண்டும் கேள்விகளை கேட்டு, நான் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள நினைத்ததை விட அவர்கள் என்னை பற்றி கேட்ப்பார்கள்.

சிறு தெருக்களிலும், பள்ளம் மேடுகளிலும் நடந்து கடைகளை கண்டு பிடிப்பது கொஞ்சம் சிரமம் தான். சில நேரங்களில், கடைகளை தேடும் போது நான் ஏற்கனவே சென்ற கடைக்கே வழி கூறி அனுப்புவார்கள். பழைய பொருள் வாங்கும் கடைகளை  கண்டுபிடிக்க எனக்கு மிகவும் உதவுவது, அவர்கள் கடை முன்பு கட்டி தொங்க விடும் பிளாஸ்டிக் பாட்டில்கள் தான். ஒரு நல்ல யுக்தி கடைகளை கண்டு பிடிக்க. ஒரு நாள் ஒரே பெரிய சாலையில்  சுமார் 35 கடைகளை காண முடிந்தது.அவ்வாறு கடைகளை தேடி செல்லும் போது, ஒரு பழைய பொருள் வாங்கும் கடை காரர், அவர் கடையில் தான் தமிழில் வெளியான காக்க முட்டை படம் எடுக்கப்பட்டது என்றும், அப்படம் இரண்டு தேசிய விருது வாங்கியதை பற்றியும் அதனால் அவர் கடை அந்த பகுதியில் பிரபலமானதும் என்று, பெருமையாக என்னிடம் கூறி கொண்டு இருந்தார்.

மேலும் என்னை ஆச்சரிய பட வைத்தது ஒரு பெண் வியாபாரி. அவர் கணவர் வேலைக்காக இலங்கைக்கு சென்று என்ன ஆனார் என்றே தெரிய வில்லையாம், சொந்த ஊரை விட்டு இங்கு குடி பெயர்ந்து, கடந்த 15 ஆண்டுகளாக  இத் தொழிலில் ஈடு பட்டு உள்ளார்.  தற்போது அவருடைய மகனும் உதவியாக இருக்கிறாராம்.

சர்வே எடுக்கும் பணியை முடித்து கொண்டு அலுவலகம் செல்லும் பொழுது, ஒரு பழைய பொருள் கடைகாரர் சொன்னது ஞாபகம் வந்தது. குப்பைகளை  தரம் பிரிப்பதில் மக்களிடம்  போதிய விழிப்புணர்வு இல்லை , மேலும் அதை யாரும் பெரிதாக பொருட்படுத்தவும் இல்லை என்றார். நான் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும், ஏனென்றால் இதை பற்றி நானே அவ்வளவாக யோசித்து பார்த்தது இல்லை,இந்த விஷயங்களை பற்றி படித்தும், கேட்டு இருந்தும் கூட.

வண்டியில் வந்து கொண்டு இருக்கும் பொழுதே, தெரு ஓரங்களில் உள்ள குப்பைகள் கண்ணில்பட்டது.  உதாரணத்திர்க்கு, நம் வீடுகளில் அருகில் வரும் குப்பை எடுக்கும் வண்டிகள் மூன்று நாட்களுக்கு வரவில்லை என்றால் என்ன ஆகும்? நாமோ அல்லது நம் வீடுகளில் வேலை செய்பவர்களிடமோ குப்பைகளை கொடுத்து தெரு ஓரத்தில் கொட்டச் செய்வோம் , இவ்வாறு எல்லோரும் செய்தால்? ஒரு குட்டி குப்பை கிடங்கு நம் வீட்டு தெருக்களில் தஞ்சம் புகும். பிறகு துர்நாற்றம் வீசும், அடுத்ததாக தொற்று நோய்கள் பரவும், மேலும் பல தொல்லைகள் உருவாகும். குப்பை கிடங்குகள் நமது தின கழிவுகளுக்கு தீர்வு அல்ல. நாம் குப்பைகளை  மறுசுழற்சிக்கும், உரமாக்குவதற்கும் பயன் படுத்த வேண்டும். அதற்கு தான் இந்த  பழைய பொருள்  வாங்கும் கடை காரர்கள் உதுவுவார்கள்.

சர்வே எடுக்கும் போது, என்னை ஆச்சரியப்பட வைத்த கேள்விகள் யார் இவர்கள் ? எங்கு இருந்து வந்தார்கள்? போன்றவை, அதில் பெரும் பாண்மையானவர்கள் திருச்செந்தூர் அல்லது திருநெல்வேலியை சேர்ந்தவர்கள். அவர்களின் குலதெய்வம் அல்லது விரும்பி வழிபடும் கடவுள் முத்தாரம்மன். மேலும் சில விபரங்களையும் என்னால் சேகரிக்க முடிந்தது, பெரும் பாண்மையானவர்கள் பத்தாம் வகுப்பையும் எட்டாதவர்கள். அவர்களின் பணி  துருபிடித்த உலோகம் போன்றவட்டுடன் இருப்பதினால், அடிக்கடி உடம்பில்   காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருந்தபோதிலும் அவர்கள் உடல் நிலையில் பெரிதும் அக்கறை எடுத்து கொள்ளவது போல் தெரியவில்லை. ஆனால் அவசியமாக அவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறையாவது தடுப்பூசி(TT) எடுத்து கொள்ள வேண்டும். 70% கடைகளுக்கு விடுமுறை இல்லை, மற்றவர்கள் வெள்ளி அல்லது ஞாயிறு அன்று கடைகளுக்கு விடுமுறை விடுகிறார்கள்.

பழைய பொருள் வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், தேவை இல்லாத மற்றும்  மறுசுழற்சிக்கு உதவும் பொருட்களை அவர்களிடம் கொடுக்கலாம் என்பதை வலியுருதியும், நாங்கள் சர்வே எடுக்கிறோம் என்பதில் அவர்களுக்கு ஒரு சந்தோசம். குடிமக்களாகிய நாம், சில நிமிடங்கள் ஒதுக்கி குப்பைகளை  தரம் பிரித்து, மறுசுழற்சிக்கு செல்ல வழிவகுப்போம். இதனை பயன்படுத்துவது மூலம் நாம் 60% குப்பைகளை மண்ணிற்கு செல்லாமல் தடுக்க முடியும். இதனால் பழைய பொருள் வியாபாரிகளுக்கு மட்டும் அல்லாமல் நமக்கும் சிறு தொகை  கிடைக்க வாய்ப்பு உள்ளது.  

எப்பொழுது இருந்து தான் நாம் குப்பைகளை பொறுப்புடன் கையாள போகிறோம்

written by Jagan Karthick G.